என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்னி பஸ்சில் அழுகிய நிலையில் புரோக்கர் உடல்
    X

    ஆம்னி பஸ்சில் அழுகிய நிலையில் புரோக்கர் உடல்

    • ஆம்னி பஸ்சில் அழுகிய நிலையில் புரோக்கர் உடல் மீட்கப்பட்டது.
    • பண்ருட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    திருச்சி:

    திருச்சி பறவைகள் சாலை பகுதியில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது. இங்கு தினமும் பஸ்கள் நிறுத்தப்பட்டு பின்னர் வெளியூர் புறப்பட்டு செல்லும். இந்நிலையில் அந்த பஸ் கம்பெனியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பஸ் இயக்கப்படாமல் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்று சரி செய்யலாம் என்று அந்த பஸ் கம்பெனியின் ஊழியர்கள் பஸ்சை எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்பொழுது பஸ் கதவை திறந்த பொழுது பஸ்சிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு 44 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக திருச்சி கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அழுகிய நிலையில் பஸ்சில் இறந்த நபர் வடிவேல் (வயது 44) இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் கடந்த பல வருட காலமாக திருச்சியில் பல்வேறு இடங்களில் தங்கி ஆம்னி பஸ் புரோக்கராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. மேலும் இவர் அடிக்கடி இங்கு வந்து பஸ்சில் ஏறி படுத்துவிட்டு காலை நேரத்தில் எழுந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலை சில நாட்களுக்கு முன்பு இரவில் பஸ்சில் படுத்திருந்த போது மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதை யடுத்து வடிவேல உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்சில் புரோக்கர் ஒருவர் அழகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×