என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காட்டுப்புத்தூரில் சிறப்பாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் வழங்கினார்
- காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடை பெற்றது.
- விழாவில் சிறப்பு விருந்தினராக முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி சான்றுகளை வழங்கினார்.
திருச்சி
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர்சாகுல் அமீது தலைமையில் சிறப்பாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடை பெற்றது.
விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதாசுரேஷ், மற்றும் துணை தலைவர் சி.சுதா சிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் கலந்து கொண்டு நகரங்களின்தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் வடிகால்கள் சுத்தம் செய்தல், பூங்காக்கள் தூய்மை செய்தல், குளங்களை சுத்தம் செய்தல், மரக்கன்றுகன் நடுதல், பொதுமக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகளை தரம்பிரித்து தர செய்தல், பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்தப்படுத்துதல், பொதுசுவர்களில்ஒட்டப்பட்டசுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல், பள்ளி வளாகங்களை சுத்தம்செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள மாதத்தில் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் நடைப்பெற்ற முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி சான்றுகளை வழங்கினார்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, பழனிவேல், மாலதி, சந்திரகலா, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன், மணிவேல், ராணி, இளஞ்சியம், ராஜ்குமார், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.