என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் -  கலெக்டர் தகவல்
    X

    திருச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்

    • திருச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற உள்ளது.
    • இதில் ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான நாளை 2-ந்தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்துதல், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல்நலத்துடன் நலவாழ்வு வாழத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,

    ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல்,

    வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மறு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்க (ஊரகம்), நம்ம ஊரு சூப்பரு பிரச்சார இயக்கம்,

    ஜல் ஜீவன் இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த சாராத தொழில்கள், கிராம ஊராட்சி வளர்ச்சி அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளதால் அவர்களை முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல், உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    இந்த கிராம சபைக் கூட்டங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×