search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி  வேளாங்கண்ணிக்கு தேர்பவனியுடன்  பாதயாத்திரை
    X

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு தேர்பவனியுடன் பாதயாத்திரை

    • வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
    • தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    திருச்சி,

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 7-ந்தேதி தேர் பவனி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல நாடுகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வது வழக்கமானது.

    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் பாதையாத்திரை சென்று வருகிறார்கள்.

    இதனை முன்னிட்டு 31-வது ஆண்டாக திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாதயாத்திரை செல்லும் குழுவினருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் நடத்தி வைத்தார். பின்னர் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை பங்கு தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து மந்திரித்தார்.

    இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியோடு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றார்கள். பாதயாத்திரை மற்றும் தேர் பவனிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான பி.ஜான் பீட்டர், கே.ரெத்தினம், பி.பிரபு, ஆர்.எஸ்.சுரேஸ், ஆட்டோஅருண், பி.ஆனந்த ராஜ், கீர்த்தி வினோத் ஆகியோர் செய்து இருந்தனர்.


    Next Story
    ×