என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பன்முக சேவையினை அஞ்சல் துறை சிறப்பாகவழங்கி வருகிறது - விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி. பேச்சு
- 150 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அஞ்சல் துறை கொரோனா காலத்தில் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்தது.
- தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு தந்திக்கு பதிலாக இ.போஸ்ட், மணியாடருக்கு பதிலாக இ-எலக்ட்ரானிக் மணியாடர் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது
திருச்சி,
திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சேவை திறன் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 150 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அஞ்சல் துறை கொரோனா காலத்தில் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு தந்திக்கு பதிலாக இ.போஸ்ட், மணியாடருக்கு பதிலாக இ-எலக்ட்ரானிக் மணியாடர் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார்.
விழாவில் திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 பேருக்கு விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விளம்பரம் இல்லாமல் பணிபுரிந்து வரும் அஞ்சல் துறை மக்களிடம் நேரடி தொடர்பு இருக்கிறது. சிறுசேமிப்பு, செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீடு, ஆதார் மற்றும் வங்கி சேவை என பன்முக சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அஞ்சல் துறையின் சேவை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் இருக்கும் வரை அஞ்சல் துறை சேவையும் இருக்கும். அஞ்சல் துறையின் மேம்பாட்டுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி கவுன்சிலர் எல்.ரெக்ஸ், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அஞ்சல் துறை இயக்குனர் ரவீந்திரன் வரவேற்றார். உதவி இயக்குனர் கலைவாணி நன்றி கூறினார்.