search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழகுடியின மாணவர்கள் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - திருச்சி கலெக்டர் தகவல்
    X

    பழகுடியின மாணவர்கள் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - திருச்சி கலெக்டர் தகவல்

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்திட ஏதுவாகவும் திருச்சி மாவட்டம், செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
    • இந்த மையத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்பற்ற பழங்குடியினத்தவர்கள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் வங்கி போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்திட ஏதுவாகவும் திருச்சி மாவட்டம், செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி மையத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம். 50 நபர்களுக்கு மேல் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சிக்கான கையேடுகள் அனைத்தும் பயிற்சி மையத்தில் உள்ளன. இப்புத்தகங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தகுதித் தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பழங்குடியின இனத்தவர்கள் திருச்சி மாவட்ட, துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்திச் செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும், பழங்குடியின இனத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×