என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரரின் 5 பவுன் செயின் திருட்டு
- போலீஸ்காரரின் 5 பவுன் செயின் அபேஸ் செய்த மர்ம நபரை தேடிவருகின்றனர்
- பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சம்பவம்
திருச்சி:
தொட்டியம் தோளூர் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தோளூர் பட்டியில் உள்ள தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக ரஞ்சித் குமார் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் தொட்டியம் யூனியன் ஆபீஸ் அருகில் இருந்து தோளூர் பட்டிக்கு ஒரு அரசு பஸ்ஸில் ஏறினார். அந்த பஸ் முசிறி கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் மாயமானது கண்டு திடுக்கிட்டார்.
மர்ம நபர்கள் அவரது செயினை அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீஸ்காரர் ரஞ்சித் குமார் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்ஸில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஐந்து பவுன் செயினை தொலைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.






