என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பிறந்தநாளையொட்டி துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை - பேட்ரிக் ராஜ்குமார் வழங்கினார்
- அரசியலில் எங்களுக்கு ஆசானாக விளங்குவது நம்முடைய திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்தான்.
- அரிஸ்டோ மேம்பால பணிகள் ராணுவ நில பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா திருச்சி 24-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 24-வது வார்டில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை, 24-வது வார்டு என அச்சடிக்கப்பட்ட பனியன்கள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் பேசியதாவது:-
அரசியலில் எங்களுக்கு ஆசானாக விளங்குவது நம்முடைய திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்தான். அவரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் திருச்சி மாநகர காங்கிரஸ் சார்பாக 7 இடங்களில் கொண்டாடப்பட்டது. அதில் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குவது, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவது உள்பட சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். அதில் பாதியில் நின்ற அரிஸ்டோ மேம்பால பணிகள் ராணுவ நில பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. நம்முடைய எம்.பி. மத்திய அரசு அமைச்சர்களிடம் பேசி ரெயில்வே நிலத்தை நம்முடைய மக்கள் பயன்பாட்டிற்காக பெற்று தந்துள்ளார்.
விமான நிலையத்திற்கு 7 ஏக்கர் நிலம் பெற்று தந்துள்ளார். புதிய விமானங்கள் நம்முடைய திருச்சி மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு வழிவகை செய்திருக்கிறார். புதிய ரெயில்களை நம்முடைய ரெயில் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு வெற்றி ெபற்று தனது பணியை தொடங்கினார்.
2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் எந்த நலத்திட்ட பணியும் செய்ய முடியாமல் இருந்தது. மேலும் மத்திய அரசு எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தியது. இதனால் தன்னுடைய மக்களுக்காக நலத்திட்ட பணிகள் செய்ய முடியாமல் வருத்தம் அடைந்தார்.
6 முறை எம்.எல்.ஏ., 2 முறை எம்.பி., மத்திய அமைச்சராக இருந்தவர் தான் நம்முடைய நம்பிக்கைகுரிய திருநாவுக்கரசர். திருச்சி மாநகரத்தை பொருத்தமட்டில் நம்முடைய 24-வது வார்டுக்கு சுமார் ரூ.25 லட்சத்திற்கான நலத்திட்ட பணிகளை செய்து தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார். அதை அவர் கட்டாயம் செய்து தருவார். இந்த வார்டு திருச்சி மாநகராட்சியில் முன்மாதிரியான வார்டாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின், இளங்கோ, தனசேகர், மாவட்ட துணைத்தலைவர் முரளி, மாவட்ட பொதுச்செயலாளர் டி.கே.சுப்பையா, 24-வது வார்டு தலைவர் ரவி, 18-வது வார்டு மலர் வெங்கடேஷ், ஜெயம்கோபி, பிரியங்கா பட்டேல்,வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்