என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளாளர் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் நியமனம்
- வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கே.டோமினிக் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதிய மாவட்ட செயலாளருக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி,
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கே.டோமினிக் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவினை மாநகர் மாவட்ட தலைவர் தங்க ரத்தினகுமார் பரிந்துரையின் பேரில், கழக மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி எஸ். ரவிராஜ் மாதவன்,மாநில மகளிர் அணி தலைவி தென்மண்டல அமைப்பாளர் ஜி. அன்னலட்சுமி சகிலா கணேசன் ஆகியோரின் ஆலோசனைப்படி கழகத்தின்
நிறுவனத் தலைவர் ஆர். வி.ஹரி ஹரூண் பிள்ளை வழங்கி உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டோமினிக் செல்வத்துக்கு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய மாவட்ட செயலாளருக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story






