என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேரவில்லை - அய்யாகண்ணு புகார்
- மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேரவில்லை என்று அய்யாகண்ணு புகார் மனு அளித்துள்ளார்.
- பொதுப்பணித்துறை அதிகாரியிடம் அய்யாகண்ணு புகார்
திருச்சி:
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் இன்று திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் உள்ள மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 ஆயிரம் கன அடி நீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.