என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.வே.சு. அய்யர் நினைவு இல்லத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மரியாதை
    X

    வ.வே.சு. அய்யர் நினைவு இல்லத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மரியாதை

    • திருச்சி வரகனேரியில் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
    • நினைவு இல்லத்தை பார்வையிட்டார்

    திருச்சி,

    தமிழ்நாடு அரசின் உத் தரவிற்கிணங்க திருச்சி வரகனேரி அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யர் நினைவு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மரியாதைபின்னர் அந்த நினைவு இல்லத்தில் வைக்கப்பட் டுள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யரின் வாழ்க்கை வர–லாறு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் கிளை நூலகத்தின் செயல்பாடுகளையும் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன், மண்டலத் தலைவர் மதிவாணன், மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், வருவாய் வட்டாட்சியர் (கிழக்கு) கலைவாணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வ.வே.சுப்பிரமணிய அய்யரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய அய்யர் என் கிற வ.வே.சு.அய்யர் 02.04.1881 அன்று பிறந்தார். இவர் வரகனேரி சிங்கம் என்றழைக்கப்பட்டார். இவர் தனது 12-வது வய–தில் தனது மாமன் மகள் பாக்கியலெட்சுமியை திரு–மணம் செய்து கொண்டார். 12 வயதில் மெட்ரிக்குலேசன் தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்றார். 16 வயதில் பி.ஏ. பட்டம் பெற் றார். 1901 ஆம் ஆண்டு சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார்.திருவள்ளுவர் இயற்றிய 1330 குறள்களையும், கம்பராமாயணக் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1917ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் புதுச்சேரி வருகையின்போது காந்தியடிகளின் சக்தியால் பயங்கரவாதி என்ற போர்வையைக் களைத்து எரிந்துவிட்டு அகிம்சா வாதியாக மாறியவர்.

    1921-ல் தேசபக்தர் என்னும் தமிழ் தினசரியில் ஆசிரியராக இருந்தபோது வேறொருவர் எழுதிய தலையங்கத்துக்காக ராஜதுரோகம் குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் ஒன்பது மாதங்கள் அடைக்கப்பட்டார். 1923-ல் சேரன்மாதேவியில் குருகுலம் துவங்கி குருகுலக் கல்வியை புகட்டினார்.

    1925 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 3 ஆம் நாள் தமது குருகுல மாணவர்களை உல்லாசப் பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச்சென்ற போது தனது மகள் சுபத்திரை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்த போது காப் பாற்றச் சென்ற வ.வே.சு.அய்யர் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.இவர் வாழ்க்கை முழுவதும் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார். வ.வே.சு.அய்யர் நாட்டின் விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து போராடி தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர் ஆவார். திருச்சியில் வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×