என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
- கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக 18-வது நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ -மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி:
கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக 18-வது நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 500 பேர் கலந்து கொண்டனர்.
கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ -மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அவர்களை எஸ்.பி. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சி யாளர்கள் மணிகண்டன், மரிய இக்னேசியஸ் ஜோ ஆகியோர் உடனிருந்தனர்.