என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கடையம் அருகே பழக்கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்17 Jun 2022 1:10 PM IST (Updated: 17 Jun 2022 1:11 PM IST)
- பாலமுருகன் என்பவரது பழக்கடையில் 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
- பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் 1½ கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது.
கடையம்:
கடையம் அருகே உள்ள மலையான்குளம் பகுதியிலுள்ள ஒரு பழக்கடையில் குட்கா விற்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாலமுருகன் என்பவரது பழக்கடையை சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
அவரிடமிருந்து 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர் .மேலும் இதேபோல் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமார் 1½ கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
X