என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் பஸ் நிலையம் அருகே சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்
- நாமக்கல்லில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
- சாலையின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் பார்க்கிங் போல காலை முதல் நள்ளிரவு வரையிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
சேலம், திருச்சி பாதையில் நாமக்கல் முக்கிய நகரமாக விளங்குகிறது. வளர்ந்து வரும் நாமக்கல் நகரத்தில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாமக்கல் வழியாக செல்லும் வாகனங்கள்
தமிழகத்தில் லாரி, முட்டைகள் மற்றும் கோழி உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் தினமும் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன.
குறிப்பாக நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் வாகனங்களும், அதே போல தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் சேலத்தில் இருந்து மதுரை, கரூர் செல்லும் வாகனங்களும், இதேபோல மதுரையில் இருந்து சேலம் வரும் வாகனங்களும் அதிக அளவில் நாமக்கல் நகருக்குள் வந்து செல்கின்றன.
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருச்செங்கோடு, பரமத்தி, ராசிபுரம் உள்பட பல பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு ஆஸ்பத்திரி, கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், அரசு அலுவலகங்கள், யூனியன் அலுவலகம், பள்ளி கல்லூரிகள் உட்பட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல்
இதனால் நாமக்கல்லில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். குறிப்பாக பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து இருக்கும். அதனால் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு–படுத்தி வருகிறார்கள்.
ஆனால் நாமக்கல் பஸ் நிலையத்திற்கு வெளிப்புறம் உள்ள மணிக்கூண்டு அருகே சாலையை அடைத்து, 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத படி போலீசாரால் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் அந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. மேலும் அந்த இடத்தில் சாலையின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் பார்க்கிங் போல காலை முதல் நள்ளிரவு வரையிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் திருச்சி, துறையூர், மோகனூர் ரோடு உள்பட பல பகுதிகளில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள், மணிக்கூண்டு அருகே உள்ள பாதை அடைக்கப்பட்டு உள்ளதால் அதன் வழியாக செல்ல முடியாமல் பரமத்தி ரோடு வழியாக சுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அடைத்து வைக்கப்–பட்டுள்ள அந்த பாதையை திறந்து விட்டால், அதன் வழியாக பூங்கா சாலைக்கு எளிதாக 4 சக்கர வாகனங்க–ளும் சென்று விடலாம்.
ஆனால் அந்த சாலை அடைத்து வைக்கப்பட்–டுள்ளதால் நீண்ட தூரம் சுற்றி பூங்கா சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் கடுமையாக நிலவுகிறது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை அந்த சாலையின் நடுவிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைத்து விட்டு செல்கிறார்கள். இதற்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பது போல் சாலை அடைத்து வைத்து உள்ளனர்.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கொதிப்படைந்து உள்ள–னர். எனவே முக்கிய சாலையான அந்த சாலையை திறந்து விட்டு 4 சக்கர வாகனங்களும் செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாமக்கல் நகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்