என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் சாவு

- வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்ற பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
- அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த டோல்கேட் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் அடிக்கடி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று இரவு அந்த வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்றள்ளார். அப்பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலை மற்றும் உடலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.