search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாநகராட்சியில் அத்தியாவசிய பணிகளுக்கு காரணம் கூறாமல்  உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு
    X

    கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கடலூர் மாநகராட்சியில் அத்தியாவசிய பணிகளுக்கு காரணம் கூறாமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு

    • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டராக அருண் தம்பராஜ் நேற்று முன்தினம் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலை யில் இன்று காலை கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருள் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் குடிநீர், சாலை, தூய்மை பணிகள், தெரு மின்விளக்கு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதி காரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு திட்டப் பணிகள் குறித்தும் அந்த பணி நடைபெறும் மாதங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு, தற்போது பணிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது சென்னையில் உள்ள சாலைகள் போல் கடலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். மக்களை கண் கவர கூடிய தெரு மின்விளக்குகள், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பார்க்கிங் வசதி, சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை உடனுக்கு டன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விரைந்து முடித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகை யில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்படும் அனைத்து பணிகளையும் அந்தந்த கால அவகா சத்திற்குள் தரமாக கட்ட மைத்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு உடனுக்குடன் அந்தந்த பணிகளுக்கான தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டும் இன்றி மாநகராட்சி முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணி யாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மையான மாநகராட்சி யாக வைத்திருக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நடை பெறும் பணிகள் தொய்வு ஏற்படாத வகையி லும், பணிகள் காலதாம தமானால் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். இதில் மாநக ராட்சி கவுன்சிலர்கள், அனைத்துதுறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×