என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேதாரண்யம் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி வேதாரண்யம் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/21/1902182-1.webp)
முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைவரும் குழுப்படம் எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்தித்தனர்.
- அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்வில் புருணை நாட்டில் இருந்து வந்த சுஜாதா, செகந்திரபாத்தில் இருந்து வந்த செந்தில் வடிவு மற்றும் கடலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒன்று கூடி, அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து கலந்துரையாடினர்.
மேலும், அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.
பின்னர், குருகுலம் அறங்காவலர் வேதரத்தினத்துடன் குழுப்படம் எடுத்து கொண்டனர்.
மேலும், அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவிகளுக்கு குருகுலம் அறங்காவலர் வேதரத்தினம் புத்தகம் வழங்கினார்.