என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி](https://media.maalaimalar.com/h-upload/2023/09/07/1946074-3.webp)
வேளாங்கண்ணியில் தேர் பவனியை முன்னிட்டு குவிந்துள்ள ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
- பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது.
இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய பெருவிழாவான அன்னையின் பிறந்தநாள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று இரவு பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியதேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
இதற்காக பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் பல்வேறு மொழிபேசும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, தினமும் சிறிய சப்பர பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன நாளை மாதாவின் பிறந்தநாள் என்பதால் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்ப ட்டுள்ளது.
நாளை காலை 6 மணிக்கு மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பரிபாலகர் சகாயராஜ்தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது என வேளாங்கண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் தெரிவித்தார்.