search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனப்பகுதியில் பேட்டரி மூலம் சைரன் அமைத்த விவசாயி கைது
    X

    வனப்பகுதியில் பேட்டரி மூலம் சைரன் அமைத்த விவசாயி கைது

    • பேரணாம்பட்டு தோட்டத்தில் சிறுத்தை சாவில் நடவடிக்கை
    • பவர் பேட்டரி பாக்ஸ், ஒயர் பறிமுதல்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேணுமூர்த்தி.விவசாயி. வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ளஇவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 26-ந் தேதி சுமார் 4 முதல் 5 வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

    இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி மருத்துவ குழுவினரால் அதே இடத்தில் சிறுத்தை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.

    இதன் பின்னர் மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) நாகசத்தீஷ்கிடி ஜாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது சிறுத்தை மின்வேலியில் சிக்கி இறக்க வில்லை.விஷம் கலந்த உணவு என எதுவும் வயிற்றில் இல்லை. காலியாக உள்ளது.

    சிறுத்தை இறந்து 3 நாட்களுக்கு மேலானதால் சரியாக எதுவும் சொல்ல முடியவில்லை.சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் சிறுத்தையின் உடல் பாகங்கள், தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்னர் சிறுத்தையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.

    இந்நிலையில் சிறுத்தை சடலமாக இறந்து கிடந்த விவசாயி வேணுமூர்த்தியின் பக்கத்து விவசாய நிலத்தின் உரிமையாளர்சேராங்கல் கிராமத்தை சேர்ந்த மோகன் பாபு (40) என்பவரை நேற்று மாலை திடீரென பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பிடித்து விசாரணைக்கு வனசரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    விவசாயி மோகன் பாபு மீது தனது விவசாய நிலத்திற்கு வனத்துறை அனுமதியின்றி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பேட்டரி மூலம் இணைப்பு கொடுத்து சைரன் சிஸ்டம் ஏற்படுத்தியதாகவும், இதனால் வன விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இறக்க வாய்ப்புள்ளதால் 1972 வன உயிரின சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    மேலும்மோகன் பாபுவிடமிருந்து பவர் பேட்டரி பாக்ஸ், சைரன், ஒயரை பறிமுதல் செய்தார்.

    Next Story
    ×