என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொற்கொடியம்மன் ஏரித் திருவிழாவில் புஷ்ப ரதத்தின் முன்பு ஆடு, கோழி பலியிட தடை
    X

    பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    பொற்கொடியம்மன் ஏரித் திருவிழாவில் புஷ்ப ரதத்தின் முன்பு ஆடு, கோழி பலியிட தடை

    • மதுகடைகள் மூட வலியுறுத்தல்
    • வல்லண்டராமம் கிராமத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரித் திருவிழா வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது.

    அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

    புஷ்பரத ஏரித்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் ஆர்டிஓ கவிதா தலைமை தாங்கினார்.

    அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய ஊர் மேட்டுக்குடிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை வரவேற்று பேசினார்.

    வருகிற 9-ந் தேதி இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்ப ரதத்தில் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்ற உடன், வல்லண்டராமம் கிராமத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    10-ந் தேதி காலை 5.30 மணி வரை நடத்திவிட்டு 6 மணிக்கு புஷ்பரதத்தை அண்ணாச்சி பாளையம் கிராமத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். ஆடுகள் மற்றும் கோழிகளை கோவில் முன்பு உள்ள தென்னந்தோப்பில் பலியிட வேண்டும். புஷ்பரதத்தின் முன்பு ஆடு, கோழிகளை பலியிட அனுமதி இல்லை.

    புஷ்ப ரதம் செல்லும் சாலைகளில் தாழ்வாக உள்ள மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும். சுகாதார வசதி, முதலுதவி சிகிச்சை முகாம், 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும், கோடை காலம் என்பதால் பக்தர்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடிநீர் அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார்களை பழுது பார்க்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் 2 வது பெரிய திருவிழா பொற்கொடியம்மன் தேர் திருவிழா ஆகும் இதனை அரசு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும், மேலும் சுற்றுப்பகுதியில் இருக்கும் அரசு மதுகடைகளை ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் கோவில் கணக்காளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சுகுமார், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அணைக்கட்டு பிடிஓ சுதாகரன், ஊர் மேட்டுக்குடிகள், அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×