search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்க பணி
    X

    வேலூரில் கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்க பணி

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலுார்:

    வேலுாரில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும், சேலம், பெங்களூர், சென்னை இணைப்பு பகுதியானதால் அனைத்து வாகனங்களும் வேலுார் வழியாகவே செல்கின்றன.

    இதனால், நகரின் இதயப்பகுதியான கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இதனால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதை தடுக்கவேண்டும், நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவியாய் தவித்தனர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் முற்றுகையிடுவதை தடுக்க, சர்வீஸ் லைன்களில் திருப்பி விடப்பட்டன. ஆனால், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

    ஏனெனில், சர்வீஸ் சாலையில் மெக்கானிக் ஷெட்டுகள் அதிகளவில் இருப்பதால், வாகன போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது. இதை தவிர்க்க, இப்போது போக்குவரத்து நடக்கும் கிரீன் சர்க்கிள் பகுதியிலிருந்து சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் வரையும், அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சர்வீஸ் லைன்கள் இப்போது உள்ள 5 மீட்டர் அகலத்தை 8.5 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால், போக்குவரத்து எளிதாகும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருந்தார். கடந்த ஆகஸ்டு மாதமே அதற்கான பணிகள் தொடங்கும் என கூறியிருந்தார்.

    ஆனால், இன்று வரை அதற்கான எந்த பணிகளுக்கான முகாந்திரமும் தென்படவில்லை. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ''கிரீன் சர்க்கிள் அளவு குறைப்பது, சர்வீஸ் லைன் அகலத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு ஸ்கெட்ச் போட்டு தந்தோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) பங்கு வருகிறது. அதனால், அந்த திட்ட அறிக்கையை நகாய் ரீஜினல் ஆபீசருக்கு அனுப்பினோம். பலமுறை தொடர்ந்து இது குறித்து பேசி வருகிறோம்.

    வேலுார் வந்த மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சரிடமும் இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அவர் 'டெக்னிக்கல்' ரிப்போர்ட் வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உடனடியாக சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்க முயற்சித்து வருகிறோம்' என்றார்.

    Next Story
    ×