search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு
    X

    சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு

    • வீடுகளின் கூரைகள் பறந்தன, மாட்டு கொட்டகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது
    • மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இந்த சூறைக்காற்றால் போடியப்பனூர், ராகிமானப்பல்லி ஆகிய கிராமங்களில் ஏராளமான மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    வீடுகளின் கூரைகள் பறந்தன, மாட்டு கொட்டகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    சூறைக்காற்றால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கபட்ட விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்ட றிந்தனர். பாதிக்கப்பட்டவர்க ளிடம் உடனடியாக சேதம் மதிப்பீட்டு கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வருவாய்த்துறை, வேளாண்மை துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

    இப்பகுதியில் உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

    ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் கோதண்டன், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×