search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறிப்பு
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறிப்பு

    • தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி
    • சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்ஸில் கூட்டமாக பயணிகள் ஏறும்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோத கும்பல் நைசாக பயணிகளிடம் இருந்து செல்போன், மணி பர்ஸ் உள்ளிட்டவைகளை திருடி செல்கின்றனர்.

    அவசரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இது குறித்து போலீசில் புகார் செய்வது இல்லை.

    இந்த நிலையில் இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த ஒருவரின் செல்போனை மர்ம கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்று விட்டனர்.

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்ட இருக்கைகளில் சமூக விரோதிகள் அமர்ந்து கொள்வது படுத்துக் கொள்வது என ஆக்கிரமிப்பு செய்வதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    எனவே பயணிகளில் உடைமைகளை பாதுகாக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே இருந்த புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து நிரந்தரமாக போலீசார் பணியாற்றி வந்தனர்.

    ஆனால் தற்போது புதிய பஸ் நிலையத்திற்குள் போலீசார் யாரும் வந்து வராததால் சமூக விரோத கும்பல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க வேண்டும் சமூக விரோத கும்பலை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×