search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை பஸ்களில் அலைமோதிய கூட்டம்
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதிய காட்சி.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை பஸ்களில் அலைமோதிய கூட்டம்

    • பக்தர்கள் அவதி
    • இடம் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு ஏறினர்

    வேலூர்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலை தீப திருவிழாவை காண காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு சார்பில் போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். புதிய பஸ் நிலையத்திற்குள் வரும் சிறப்பு பஸ்களில் இடம் பிடிக்க பக்தர்கள் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில பஸ் டிரைவர்கள் பஸ்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல் அங்கும் இங்குமாக பஸ்களை ஓட்டிச் சென்று பக்தர்களை அலைக்கழித்தனர்.

    கடந்த ஆண்டு திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள் குழந்தைகளை தவறவிட்டால் எளிதாக கண்டுபிடிக்க புதிய பஸ் நிலையத்தில் போலீசார் அடையாள டேக் கட்டி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு குழந்தைகளுக்கு டேக் கட்டப்படவில்லை.

    Next Story
    ×