என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/03/1875575-.webp)
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிமுதல் 3 மணிவரை வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இதில் 150 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கு பெற உள்ளனர்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ.டிகிரி, நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.
தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.
தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 8148727787,9095559590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.