search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிக்கோட்டையில், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
    X

    முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    காரிக்கோட்டையில், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

    • முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.
    • சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    இந்த முகாமுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். காரிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை ( பொறுப்பு ) டாக்டர் டி.ராமலிங்கம் விளக்க உரையாற்றினார்.

    ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி‌.பாலகிருஷ்ணன், மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா மேலாளர் சுவேந்து சாட்டர்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் ( ஓய்வு ) டாக்டர் டி. தமிழ்ச்செல்வன், பேங்க் ஆப் பரோடா விவசாயி அலுவலர் ஆர். மோனிகா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் சி.குருசாமி, மிட்டவுன் ரோட்டரி சங்கம் பொருளாளர் டி.அன்பழகன், முன்னாள் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.

    அம்மை நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, சினை ஊசிகள், சினை பார்த்தல், காளைகளுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதையடுத்து சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பான் செக்கர்ஸ் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் லலிதா தேவி, ஜோஸ்லின், சோபியா மற்றும் ஆகியோருக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி‌. பாலகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் குழு டாக்டர்கள் கார்த்திக், வெற்றிவேல், ராகவி, கால்நடை ஆய்வாளர்கள் குருநாதன், ராணி எலிசபெத், செங்குட்டுவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் பாரதி, நடராஜன், அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேங்க் ஆப் பரோடா அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×