என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடி அருகே மழையால் சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகம்
Byமாலை மலர்25 Nov 2023 1:35 PM IST
- கோடைமழையின் போது கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.
- இதனால் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் செட்டியாபத்து கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. 6 மாதங்களுக்கு முன் பெய்த கோடைமழையின் போது இந்த கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.
இதனால் இந்த கட்டிடம் மக்கள் பயன்பாடுக்கு உகந்ததாக இல்லை என கூறி அதனை நிரந்தரமாக பூட்டி விட்டு, அந்த கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகத்தை இடம் மாற்றி அமைக்கப்பட்டது.
இ-சேவை மையம் அலுவலகம் சிறியதாக இருப்பதால் அதில் 2 அலுவலகம் உள்ளே செயல்பட முடிய வில்லை எனவும், அதனால் கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பித்து கட்டி அதனை பொது மக்கள் செயல்பாடுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×