என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சள்பரப்பு கிராமத்தில் விநாயகர் ஊர்வலம் சென்ற காட்சி.
பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா
- விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
- அந்தந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன.
பெரும்பாறை:
பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, வெள்ளக்கரை, கொங்கப்பட்டி, புதூர், எம்.ஜி.ஆர்.நகர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கவியக்காடு உள்ளிட்ட கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கணபதி ஹோமம், மகா அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்தந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் வழி நெடுகிலும் வாணவேடிக்கை, மேளதாளம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






