search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் 21 பவுன் நகைகளை அபகரித்த தம்பதி
    X

    பெண்ணிடம் 21 பவுன் நகைகளை அபகரித்த தம்பதி

    • கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் 21 பவுன் நகைகளை கணவன்-மனைவி அபகரித்தனர்.
    • கோர்ட்டு உத்தரவின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது45). இவருக்கு மகளிர் சுயஉதவிக் குழு மூலமாக விளாம்பட்டியை சேர்ந்த ஜூலியட் ராணி, அவரது கணவன் சுந்தரமூர்த்தி ஆகியோர் அறிமுகமாகினர். இவர்கள் நட்பாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக மகேஸ்வரியிடம் ஜூலியட் ராணி கேட்டார். ஆனால் தற்போது பணம் இல்லை என்று மகேஸ்வரி கூறி யுள்ளார். ஆனால் ஜூலியட் ராணி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதன்பின்னர் தனது 3 பவுன் நகையை மகேஸ்வரி கொடுத்துள்ளார்.

    இதனிடையே வீட்டு கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஜூலியட் ராணியிடம் மகேஸ்வரி கூறியுள்ளார். அப்போது தாங்கள் நகையை அடகு வைத்து கடன் பெற்று தருவதாக ஜூலியட் ராணி கூறியுள்ளார்.

    அதனை கேட்ட மகேஸ்வரி தான் ஏற்கனவே அடகு வைத்திருந்த 18 பவுன் நகைகளை திருப்பி ஜூலியட் ராணியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். சந்தேகமடைந்த மகேஸ்வரி அதுகுறித்து விசாரித்த போது

    ஜூலியட் ராணியும், அவரது கணவரும் தங்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதும், அந்த பணத்தை மகேஸ்வரிக்கு கொடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜூலியட் ராணியிடம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நகைகளை திருப்பி கொடுக்குமாறு மகேஸ்வரி கேட்டார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. நகைகளையும் கொடுக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மகேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×