search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலையம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா
    X

    கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    மாலையம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா

    • திருச்சுழி மாலையம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட துணை மாலையம்மன்- திருமேனிநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி தபசு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி தபசு திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக சுவாமி-அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    விழாவில் வருகிற 30-ந்தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 31-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. 1-ந்தேதி ஆற்றங்கரையில் தீர்த்த நிகழ்ச்சியும், அன்று மாலை திருமேனிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குண்டாற்றில் எழுந்தருளு வார். அங்கு துணை மாலை யம்மனுக்கு தபசு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடக்கும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கி றார்கள்.

    Next Story
    ×