search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப அட்டைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேசன் கடைகள் திறக்கப்படும்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
    X

    புதிய பகுதி நேர ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பொருட்களை வழங்கினார். அருகல் கலெக்டர் ஜெயசீலன், தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

    குடும்ப அட்டைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேசன் கடைகள் திறக்கப்படும்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

    • குடும்ப அட்டைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
    • ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாநகர் பகுதியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நியாய விலை கடையினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும், 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×