என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு காட்ட தயாரா?
- அ.தி.மு.க. செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு காட்ட தயாரா? என ராஜேந்திரபாலாஜிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சவால் விடுத்துள்ளார்.
- புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பொன்விழா மைதானத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார்வேல்முருகன் தலைமை தாங்கினார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் , தலைமை கழக பேச்சாளர் நன்னிலம் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-
கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம், அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் வசதி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது சட்ட மன்ற உறுப்பினரானபோது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது.
ராஜபாளையம் வட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்ததை பிரித்து மீண்டும் சிவகாசி கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இனிவரும் ஆண்டுகளில் ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராஜபாளையத்திற்கு அரசு பெண்கள் கல்லூரி, எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து அமிழ் ஓட்டல்வரை இணைப்புசாலை அமைத்தல், ராஜபாளையம் தொகுதியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
ராஜபாளையம் வளர்ச்சிக்கான பணிகள் நடக்காதது போல, பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதற்குமுன் இருந்த எந்தவொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வும் ஒரே ஒரு வளர்ச்சி திட்டமாவது கொண்டுவந்து செயல்படுத்தியதாக அவர் நிரூபிக்க தயாரா? இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். ஆதாரங்களோடு நான் செயல்படுத்திக் கொண்டி ருக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் காட்டத் தயார். அவரால் முடியுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் , ஜெயமுருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பா ளர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோ வன் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேலு, துரை கற்பகராஜ், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாணவரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்