என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
63 பன்றிகளை ஊசி போட்டு கொன்ற கால்நடைதுறை அதிகாரிகள்
- ஆப்பிரிக்கன் காய்ச்சல் எதிரொலியாக 63 பன்றிகள் ஊசி போட்டு கொல்லப்பட்டன.
- பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அமீர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் ஒரு பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியின் உடலை கால்நடை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது அந்த பன்றி ஆப்பிரிக்கன் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 63 பன்றிகளை ஊசிபோட்டு கொல்ல மாவட்ட கால்நடைதுறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த பன்றிகளுக்கு ஊசிபோட்டு கொன்றனர். அதற்காக 18 அடி நீளம், 20 அடி அகலத்தில் குழி வெட்டி பன்றிகளை புதைத்தனர்.
மாவட்ட கால்நடைதுறை இணை இயக்குநர் கோவில்ராஜா இதுகுறித்து கூறுகையில், ஆப்பிரிக்கன் காய்ச்சலால் பன்றிகள் மட்டுமே பாதிக்கப்படும். வேறு விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவாது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுவிட்டன. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.