என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பரிசு
- விருதுநகரில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் பரிசு வழங்கினார்.
- விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டா ட்சியர் ரங்கநாதனுக்கு 3-ம் பரிசும்ட வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் ராம்தாசுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் சீதாலட்சுமிக்கு 2-ம் பரிசும், ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சரசுவஸ்வதிக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சி யர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜா மணிக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப் பிள்ளைக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது. உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தனுக்கு 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கப்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத் துணை ஆய்வாளர் ராமசுப்பு ஆகியோருக்கு 3-ம் பரிசும், வழங்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார்ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிச்செல்விக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட சார் ஆய்வாளர் முத்து மாரிக்கு 3-ம் பரிசையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி கோட்டாட்சியர் விசுவ நாதன், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






