search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு விற்பனையில் உள்ள தடையை நீக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமா?- மாணிக்கம் தாகூர் எம்.பி.
    X

    மாணவ-மாணவிகளுடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துரையாடிய போது எடுத்த படம்.

    பட்டாசு விற்பனையில் உள்ள தடையை நீக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமா?- மாணிக்கம் தாகூர் எம்.பி.

    • பட்டாசு விற்பனையில் உள்ள தடையை நீக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமா? என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
    • வைரகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், உள்பட பலர் இருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆய்வு செய்தார். பின்னர் மீனம் பட்டியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாண வர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு வராமல் இருக்க வேண்டும். நாங்கு நேரியில் நடந்த சம்பவம் இனி வரும் காலத்தில் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்க கூடாது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தான். பட்டாசு தொழில் வளர்ச்சி இல்லா மல் போனது.

    இந்தியா கூட்டணி அரசு அமையும் போது பட்டாசுக்கு தற்போது உள்ள பிரச்சி னைகள் அனைத்தும் சரி செய்யப்படும். இந்த வருடம் தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய தற்போது உள்ள தடையை உச்சநீதிமன்றம் சென்று பா.ஜ.க. நீக்குமா? இதற்கு அண்ணாமலையிடம் பதில் உள்ளதா?.

    அண்ணாமலை நடை பயணத்தின் போது விளம்பரத்துக்காக பேசி வருகிறார். அவருடன் தொண்டர்கள், பொது மக்களை விட போலீசார் தான் அதிகளவில் வருகி றார்கள். ஒரு சட்டமன்ற தொகுதியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டும் நடப்பது யாத்திரை என்பது நடிப்பின் உச்சகட்டமாக தெரிகிறது. இதற்கு அதானி யின் பணம் செலவு செய்யப் படுகிறது. நடைபயணத்துக்கு ஆகும் செலவு விபரங்களை அண்ணாமலை வெளியிட தயாரா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்ன தம்பி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், பைபாஸ் வைரகுமார், மாவட்ட செய்தி தொடர் பாளர் மீனாட்சிசுந்தரம், உள்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×