search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது-மாணிக்கம் தாகூர் எம்.பி.
    X

    விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது-மாணிக்கம் தாகூர் எம்.பி.

    • விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரெயில் பாதை திட்டம் பல்லாயிரக்கானக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளும் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய ரெயில் போக்குவரத்து திட்டம் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களை இணைக்கும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு ரூ.360 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை திடீரென்று முடக்கி தென் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்து 9 ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படவே இல்லை.

    ஏற்கனவே இருந்த குறுகிய ரெயில் பாதையை அகலப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டியது. ஏற்கனவே காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடங்கிய ரெயில் பாதை திட்டங்களை கூட, தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்த திட்டங்களைக் கூட இன்று வரை நிறை வேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. தமிழ்நாட்டை குறிப்பாக விருதுநகர் தொகுதியை பாரதீயஜனதா அரசு திட்டமிட்டு புறக்க ணிப்பதுடன் வஞ்சித்தும் வருகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    இந்த திட்டத்திற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பல வகைகளில் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும் வகை யிலான இத்திட்டத்தை முடக்கியத்தின் மூலம் இப்பகுதி மக்களை ஏமாற்றி விட்டது மோடி அரசு. திட்டங்களை நிறை வேற்றாமல் மோடி அரசு விளம்பரங்கள் மூலம் சுய வெளிச்சம் பெறுவதற்கா கவும், அதானிக்காகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட கைவிடப்பட்ட இந்த திட்டம் நிச்சயம் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையில் அமையும் புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×