என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி கடும் பாதிப்பு
- ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- நுாற்பாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன.
ராஜபாளையம்
தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள், பேண்டேஜ் மருத்துவ துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது அதன்படி திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், ராஜபாளையத்தில் இருந்து பஞ்சு நூல் மற்றும் ராஜ பாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் பகுதிகளில் இருந்து பாண்டேஜ் மருத்துவ துணி போன்ற பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட சரக்குகள், கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருப்பு வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அந்த நாட்டு மக்கள் சிக்கன நடவடிக்கையில் உள்ளனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து, எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கணிசமாக அளவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,680 கோடியாக குறைந்துள்ளது. 2022 ஏப்ரலில் ரூ.8,831 கோடியாக இருந்த பருத்தி நுால், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி, நடப்பாண்டில், ரூ. 7 ஆயிரத்து 282 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.
இதேபோல் செயற்கை நுாலிழை 'பேப்ரிக்' மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ. 3 ஆயிரத்து 477 கோடியாக இருந்தது. இந்தாண்டில், ரூ.3ஆயிரத்து 223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது
இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.348 கோடியாக இருந்த நிலையில் தற்போது, ரூ.274 கோடியாக குறைந்துள்ளது. 'கார்பெட்' ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ.952 கோடியாக இருந்து, ரூ. 862 கோடியாக குறைந்துள்ளது.
கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தி யாகும் கார்பெட் ஏற்றுமதி ரூ.1,182 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ரூ.989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு, அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு-நுால் விலையுடன் தயார்நிலையில் இருந்தும், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. நுாற்பாலைகளும், உற்பத்தியை குறைத்து உள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல், இயல்புநிலை திரும்பாது. போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.
இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது. எனவே அனைத்து தரப்பி னரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்து றையினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்