search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது: கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    குரூப்-4 தேர்வு முன் ஏற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் மேகநாதரெட்டி ஆலோசனை நடத்தினார்.

    குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது: கலெக்டர் அறிவுறுத்தல்

    • குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் வலியுறுத்துகிறார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெ ட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 24-ந் தேதி குரூப்-4 தேர்வு, அதாவது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 237 தேர்வு மையங்களில் 81 ஆயிரத்து 44 விண்ணப்பதாரர்கள்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 309 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 52 மொபைல் பார்ட்டியும் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 237 தேர்வு மையங்களுக்கும் 317 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

    தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும்.

    நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது.

    தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×