என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம்
- கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை சமையல் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பாக ராஜா முத்து திருத்தங்கள் பகுதியில் உள்ள உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி களை சமையலுக்கு பயன்படுத்த வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது 46 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சில ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 ஓட்டல்க ளுக்கு தலா ரூ.2000 அபரா தமும்,5 ஓட்டல்களுக்கு ரூ.5000 ஆயிரம் என மொத்தம் ரூ.39 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து கூறும் போது, ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.