search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.

    ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    • ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    சிவகாசி,

    சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்த காரணமாக சில மாதங்கள் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைந்தது.

    மக்கள் துணிப்பைக்கு மாறிக்கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை தொடங்கியது. தற்போது தமிழகத்தில் 95 சதவீத கடைகளில் மறுசுழற்சிக்கு வாய்ப்பில்லாத பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியிலும் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகள் அதிகரித்தது. இதை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாண்டியராஜ், முத்து பாண்டி, மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் கடைவீதி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு குடோனில் 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உரிமையாளர் ரவீந்திரனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிகாரிகள் சிவகாசி பி.எஸ்.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 1500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் சந்திரசேகருக்கு ரூ. 20 ஆயிரம் விதிக்கப்பட்டது. சிவகாசியில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ பிளாஸ்டிக் கவர், பொருட்களின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×