search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடக்கம்
    X

    புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடக்கம்

    • புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
    • வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் புதுப்பாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா ராஜூக்கள் சமூகத்தினர் சார்பில் கடந்த 9-ந் தேதி சிறப்பாக நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக பல்வேறு சமூகத்தினர் இணைந்து சிறப்பாக கொண்டாடும் சித்திரை பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சா ரியார்கள் அலங்கரிக் கப்பட்ட கம்பத்தில் திரு விழா கொடியேற்றினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடி யேற்றம் தொடங்கியது முதல் ஒவ்வொரு சமூகத்தி னற்கு ஒரு திருவிழா என 11 நாட்கள் திருவிழா நடை பெறும். வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.

    திருவிழாவில் புதுப் பாளையம் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் ஆராதனைகள் செய்யப் பட்டு அம்மன் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம், பூத வாகனம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாக னங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா தலைமையில் அறங்காவலர் குழு ரமேஷ்ராஜா,ராம்ராஜ்ராஜா,ஜெய்குமார்ராஜா, கார்த்திக்ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×