என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி தேரோட்ட திருவிழா
- ராஜபாளையம் அருகே புரட்டாசி தேரோட்ட திருவிழா நடந்தது.
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று தோரோட்டம் நடைபெற்றது. ஏ.கே.ஆர். குழும தலைவர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தேருக்கு பின்னால் விழுந்து வழிபாடு செய்து தங்களுடைய நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.






