search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு மருத்துவ முகாம்

    • கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • சுமார் 823 நெசவாளர்கள் வரை பயனடைந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி துறையின் கீழ் 52 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இச்சங்கங்கள் மூலமாக 6000 நெசவாளர்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இச்சங்கங்களில் பருத்தி ரக சேலைகள், செயற்கைப் பட்டு சேலைகள், லுங்கிகள், வேட்டிகள், அரசின் விலையில்லா சேலை, விலையில்லா காடா துணி இரகங்கள் நெசவு செய்யப்பட்டு வருகிறது.

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சுந்தர பாண்டி யத்தில் உள்ள சாலியர் சமுதாய திருமண மண்ட பத்தில் நெசவாளர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதனை கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, சுந்தர பாண்டியம் பேரூராட்சி சேர்மன் ராஜம்மாள், வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெய ராமன், ஊர் தலைவர் சடையாண்டி, சுந்தர பாண்டியம் தி.மு.க. நகர செயலளர் காளிமுத்து, சுந்தர பாண்டியம் அ.தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.

    இம்மருத்துவ முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை அலு வலர்கள். செவிலியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இ.சி.ஜி. எக்ஸ்ரே, ரத்தஅழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 823 நெசவாளர்கள் வரை பயனடைந்தனர்.

    மேலும் இம்முகாமில் கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம். முத்ரா கடன் மேளா, கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம், தொழில்முனைவோர் வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியனவும் நடைபெற்றது.

    Next Story
    ×