search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
    X

    கபடி போட்டியை கலெக்டர் ஜெயசீலன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

    • விருதுநகர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் மற்றும் சத்திரிய பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கி, ஜனவரி 29-ந் தேதி வரை 17 ஆயிரத்து 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகளை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், அதைதொடர்ந்து சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மாணவி களுக்கான கையுந்து பந்து போட்டியையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விளையாட்டின் முக்கியத்துவம், விளையாடுவதனால் என்ன பயன்? என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விளையாட்டின் மூலம் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள முடியும். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை.

    இதில் பங்கேற்பதே முதல் வெற்றி என்றும், இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை கலெக்டர் தெரிவித்தார்.

    கபடி போட்டிகளில் 42 பள்ளி மாணவர் அணிகளும், பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகளில் 12 அணிகளும் பங்கேற்றன. பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்தி றனாளிகள் பங்கேற்கும் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெறுவார்கள்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×