என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுடன் செல்பி எடுத்து கொண்டார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கர்ப்பிணி பெண்களை அவரது தாய், தந்தையர், மாமியார் கணவர் 10 மாத காலம் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
அதன் பின்னர் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர் மற்றும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.






