என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
- அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர், சிவகாசி ஆகிய இடங்களில் கூட்டுற வுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கே ற்று 1,108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11 ஆயிரத்து 197 பயனா ளிகளுக்கு ரூ.18.24கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட த்தில் மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புற ங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினார்.
தற்போது முதல்-அமைச்சர் செயல்படுத்திய மகளிருக்கான இலவச பஸ் பயணம் திட்டம் மூலம் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லக்கூடிய பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த இலவச பயணம் மூலம் பெண்கள் செலவிடும் கட்டணம் பொருளா தாரத்தில் ஒரு பங்காக சேமிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து கடன் திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 1,195 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு ரூ.32.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய திட்டங்களுடன், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களின் உரிமைக்காகவும், மேம்பா ட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகு மார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுச்சாமி, விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர்ம ன்றத்தலைவர் மாதவன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை த்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்