search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அனுமதியின்றி பெண்கள் மூலம் அரங்கேற்றப்படும் மணல் கொள்ளை
    X

    வீரசோழன் ஆற்றுப்பகுதியில் பெண்கள் மூலம் சாக்கு மூடைகளில் மணல் அள்ளப்படும் காட்சி.

    அரசு அனுமதியின்றி பெண்கள் மூலம் அரங்கேற்றப்படும் மணல் கொள்ளை

    • அரசு அனுமதியின்றி பெண்கள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.
    • மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வீரசோழன் பகு–தியில் பல முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதி–யில் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதாலும் வீரசோ–ழன் பகுதியில் நிலங்களின் மதிப்பு பல லட்சங்களை தாண்டி வரும் நிலையில் கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    வீரசோழன் பகுதியில் ஏற்கனவே வீடுகள் அனைத் தும் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் மேலும் இங்கு நிலம் வாங்கியோர் இன்னும் வீடுகளை கட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே அரசு மணல் அள்ள தடை விதித் துள்ள நிலையில் வீரசோ–ழன் ஆற்றுப்பகுதியில் இர–வும், பகலுமாக பெண்கள் மூலமாக தொடர்ச்சியாக சாக்குப்பை–களில் மணல் அள்ளப்பட்டு விற்பனை வருவதாக சமூக ஆர்வ–லர் கள் குற்றம் சாட்டி வரு–கின்றனர்.

    ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி சாக்குப்பை–களில் அள்ளப்பட்டு வரும் மணலானது வீடுகள் கட்டி வருபவர்களுக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நூறுநாள் வேலை திட்டம், விவசாய பணிகளை கைவிட்டு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் பெண்கள் எந்த முதலீ–டும் இல்லாமல் நாளொன் றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சம்பாதித்து வருவதா–கவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுபவர் கள் பெண்களாக இருந்து வருவதால் ரோந்து வரும் போலீசாரும், நாள்தோறும் மணல் கொள்ளையில் ஈடுபடு–வோரை கண்கா–ணித்து வரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் கொஞ்சமும் கண்டுகொள்வ–தில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    மேலும் வீடுகள் கட்டி வருபவர்களுக்கு குறைந்த விலையில் எம்.சாண்ட், பி.சாண்ட் மணல் கிடைத்தா–லும், வீடு கட்ட ஆற்று மணல் தான் சிறந்ததாக கருதப்படு கிறது. எனினும் மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்துள்ளதால் மணல் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் நீடித்து வரு–கிறது. மேலும் வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்குவதென்றால் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதால் லாரிக–ளில் இருந்து மணல் இறக்கு–மதி செய்வதற்கும் வீட்டு உரிமையாளர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவ–தில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீரசோ–ழன் அற்றுப்பகுதி–யில் பெண்கள் மூலமாக சாக்கு–பை–களில் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் ஆற்று மணலுக்கு மவுசு கூடியுள்ளது.மேலும் வீரசோழன் ஆற்றுப்பகு–தியில் கொரோனா காலத் திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக இங்கு மணல் அள்ளப்பட்டு வருவ–தாகவும் மேலும் இந்த செயலில் பெண்கள் ஈடு–பட்டு வருவதாகவும் தெரி–வித்த சமூக ஆர்வலர்கள் இதனால் கனிமவளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவ–தாகவும் வேதனை தெரிவித்தனர். ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக வீர–சோழன் ஆற்றுப்பகு–தியில் அள்ளப் பட்டு வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×