search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
    X

    வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

    • ஈரோடு வ. உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் இன்று வ.உ.சி. பூங்க மார்க்கெட்டிற்கு 12 டன் மட்டுமே காய்கறிகள் வரத்தாகின.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    தாளவாடி, மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஒட்டன்சத்திரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. தினமும் 15 டன் முதல் 18 டவுன் வரத்தாகி வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் இன்று வ.உ.சி. பூங்க மார்க்கெட்டிற்கு 12 டன் மட்டுமே காய்கறிகள் வரத்தாகின.

    இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்ற கேரட் விலை இந்த வாரம் ரூ.40 அதிகரித்து ரூ.90-க்கு விற்பனையானது.

    மேட்டுப்பாளையம் ஊட்டியில் இருந்து கேரட் அதிக அளவில் வரத்தாகி வந்த நிலையில் மழை காரணமாக கேரட் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்த–னர். மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:-

    கத்திரிக்காய் - 40, வெண்டைக்காய் - 25, கருப்பு அவரை - 60, பட்ட அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கங்காய் - 60, முட்டைகோஸ் - 35, முருங்கைக்காய் - 50, பாகற்காய் - 40, மிளகா - 80, பீன்ஸ் - 50, கடந்த வாரம் ரூ. 40-க்கு விற்ற பீட்ரூட் இந்த வாரம் ரூ-70 ஆக இருந்துள்ளது. பூசணி–க்காய் - 20, இஞ்சி - 70, சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம்- 25 முதல் 30 வரை விற்பனையானது.

    Next Story
    ×