search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருட்சவனம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மாணவர்களுடன் பார்வையிட்டு விளக்கமளித்த கலெக்டர்
    X

    அரியவகை மரங்கள் வளர்க்கப்பட்டு வருவதை பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு விளக்கமளித்தார்.

    விருட்சவனம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மாணவர்களுடன் பார்வையிட்டு விளக்கமளித்த கலெக்டர்

    • மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் நடவு செய்து பாதுகாக்கும் வகையில் திருமலைசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • உலகின் சிறிய கோழி வகையான மலேசிய செராமா கோழிகள், வாத்துகள், மீன் பண்ணை அமைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள விருட்ச வனம் மரங்கள் சரணாலயத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிரபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    "வன வளத்தை பெருக்கினால் அது நாட்டு வளத்தைக் கூட்டும்" தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பேணிக்காக்கும் நோக்கத்துடனும் இயற்கையாக வளர்ந்து வரும் உள்ளூர் மரங்கள், அரிய வகை மர வகைகள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உதவியாக உள்ள மரங்களை பேணிப் பாதுகாக்கவும், வளரும் தலைமுறையினருக்கும் மற்றும் அனைவருக்கும் மர வகைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் அவற்றை நடவு செய்து பாதுகாக்கும் வகையில் திருமலைசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 15.9.2021 அன்று தொடங்கப்பட்டது.

    இந்த விருச்சவனத்தில் நெட்டிலிங்கம், மடகாஸ்கர் பாதாம், கருங்காலி, வெள்ளை கருங்காலி, உசிலை மரம், கோணப்புளி, இலுப்பை, புன்னை, சப்போட்டா, நார்த்தை, மலைவேம்பு, வெங்காரை, சில்வர் டிரம்பட், வெப்பாலை, கூட்டுப்பின்னை, வாட்டர் ஆப்பிள், கிடாரங்காய், புரசு, ஆப்பிள், புளுமேரியா வெள்ளை, காட்டு பின்னை, அரசமரம், மஞ்சக்கடம்பு, வெண்தேக்கு,

    குரங்கு வெற்றி லை, அத்திமரம், இலந்தை, நறுவிளி, பலா, புளுமேரியா சிவப்பு, தான்றிக்காய், பரம்பை, கருவாலி, தடசு, இத்தி இச்சி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, ஆட்டுக்கொம்பொடி மரம், திருஓடு (உருண்டை), வெல்வெட்மரம், வன்னிமரம், வெள்ளை மந்தாரை, காசி வில்வம், மாவிலங்கை, ருத்ராட்சம்,

    திருஓடுநீளம், சிலோன் வுட், புளிச்சக்காய், மர தொரட்டி, கிளுவை, காட்டரசு, நஞ்சுண்டான், காட்டு துவரை, முள்ளில்லா மூங்கில், டிராகன் பழம் உள்பட 216 மர வகைகளை உள்ளடக்கிய "விருட்ச வனம்" என்ற மரங்கள் சரணாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதோடு மட்டுமில்லாமல் இந்த சரணாலயத்திலே பன்முக த்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை பள்ளி மாணவ மாணவ செல்வங்கள் சிறுவயதிலே அறியும் வகையில் காய்கறி தோட்டம், புங்கனூர் பசு, காளை, முயல் பண்ணை, உலகின் சிறிய கோழி வகையான மலேசிய செராமா கோழிகள், வாத்துகள், மீன் பண்ணை அமைந்துள்ளது.

    விரைவில் 100 நபர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சரணாலயத்தில் அமையப் அமையப்பெறவுள்ளது.

    இதன் மூலம் இயற்கை மரவகைகள் பாதுகாக்க ப்படுவதோடு சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவத்தை இதனை காண வரும் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள்மற்றும் பொது மக்கள் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரம் வளர்ப்பதில்ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்து டன் விருட்சவனம் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், (வருவாய்) மரு.சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சங்கர், தாசில்தார் மணிகண்டன், திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×