search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை வடவாற்றங்கரை சூரியக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது
    X

    தஞ்சை சூரிய குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியை மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சை வடவாற்றங்கரை சூரியக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது

    • அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
    • குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10-ல் வடவாற்ற ங்கரை பகுதியில் சூரியக் குளம் உள்ளது.

    மாநகரில் முக்கியமான குளமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சியில் ஏற்கனவே அழகி குளம் உள்பட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு நடைபா தைகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகின்றன.

    அந்த வகையில் சூரிய குளத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேயர் சண்.ராமநாதன் அந்த குளத்தை ஆய்வு செய்து வடவாறில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் குளத்தில் தண்ணீர் நிரப்பி அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறும் போது:-

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு நவீன முறையில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இதே போல் இன்னும் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

    அந்த வகையில் வடவாற்றங்கறை சூரிய குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும். இன்னும் பல்வேறு வசதிகள் இந்த சூரிய குளத்தில் அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.80 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளன. நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொ றியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன், அறிவு, கண்ணன், மூவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×